1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (12:16 IST)

U-19 உலகக்கோப்பை கொண்டாட்டம்.. ஜெய்ஷா முக்கிய அறிவிப்பு

jaishah
19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் நேற்று இந்தியா அபாரமாக வென்று சாம்பியன் பட்டம் பெற்றது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
அதன்படி 19 வயதுக்குட்பட்டவருக்கான டி20 உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பிப்ரவரி ஒன்றாம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து மூன்றாவது டி20 போட்டியை காண அழைக்கிறேன் 
 
உங்களின் மிகப்பெரிய சாதனையை அந்த மைதானத்தில் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வரும் பிப்ரவரி 1ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
Edited by Mahendran