செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2023 (08:04 IST)

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசு: ஜெய்ஷா அறிவிப்பு!

jaishah
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசு: ஜெய்ஷா அறிவிப்பு!
19 வயது உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது என்பது ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் உலககோப்பை சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய மகளிர் அணிக்கு ரூபாய் 5 கோடி ரூபாய் பரிசு தொகையை பிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவதுள்:
 
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சியில் உள்ளது என்றும் ஜூனியர் உலகக்கோப்பை வெற்றியால் மகளிர் கிரிக்கெட்டின் அந்தஸ்து பலபடிகள் உயர்ந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 
 
இந்திய மகளிர் அணியினர் மற்றும் ஊழியர்களுக்கு ரூபாய் 5 கோடி பரிசு தொகையாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva