1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2023 (20:04 IST)

U19 உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

U19 india
U19 உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்
19 வயது உட்பட்டவருக்கான உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெற்றது 
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக கோப்பை சாம்பியன் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக விளையாடின. 
 
இந்த நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
இதனை அடுத்து 69 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணி 14 ஓவர்களில் மூன்று கட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனை அடுத்து 2023 ஆம் ஆண்டின் 19 வயதுக்குட்பட்டவர்க்கான மகளிர் உலகக் கோப்பை போட்டியின் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva