திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2023 (17:00 IST)

19 வயதுக்குட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை: இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா

U19 women
19 வயதுக்குட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை: இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா
கடந்த சில நாட்களாக 19 வயதுக்குட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரில் இந்தியா மிக அபாரமாக விளையாடியது என்பதை தெரிந்தது. 
 
சூப்பர் சிக்ஸ் பிரிவில் இந்திய அணி முதல் இடம் பெற்றதை அடுத்து அரையருதியிலும் வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து இன்று இந்திய அணி இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 19 வயது உட்பட்டவருக்கான உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 
 
இதனை அடுத்து இங்கிலாந்து அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய கலந்தரங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெல்லும் அணி உலக கோப்பையை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் தீவிரமாக வெற்றிக்கு முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் ஆக இந்திய மகளிர் அணி ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva