1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (20:19 IST)

மகளிர் உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வரும் 21ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இன்று நடைபெற்ற மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 20வது ஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் தேவை என்ற நிலையில் மே.இ.தீவுகள் அணி இருந்த நிலையில் கடைசி ஓவரை வீசிய பூனம் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
 
ஸ்கோர் விபரம்:
 
இந்திய மகளிர் அணி: 107/8  20 ஓவர்கள்
 
பாண்டே: 24
ஷர்மா: 21
வாஸ்ட்ராக்கர்: 13
ஷாபலி வெர்மா: 12
 
மே.இ.தீவுகள் மகளிர் அணி: 105/7
 
கிர்பி: 42
மாத்யூஸ்: 25
ஹென்ரி: 17
டெய்லர்: 16
 
இதேபோல் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, தென்னாப்பிரிக்கா மகளிர் அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது