1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (07:59 IST)

கேப்டன் மோர்கன் அதிரடி ஆட்டம்: தொடரை வென்றது இங்கிலாந்து!

கேப்டன் மோர்கன் அதிரடி ஆட்டம்: தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது
 
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் மிக அபாரமாக பேட்டிங் செய்து 22 பந்துகளில் 57 ரன்கள் அடித்து தனது அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
தென்னாப்பிரிக்கா: 222/6
 
கலேசன்: 66
பவுமா: 49
டீகாக்: 35
மில்லர்: 35
 
இங்கிலாந்து: 226/5
 
பெயர்ஸ்டோ: 64
பட்லர்: 57
மோர்கன்: 57
ஸ்டோக்ஸ்: 22
 
ஆட்டநாயகன்: மோர்கன்
தொடர் நாயகன்: மோர்கன்
 
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது