உலகக்கோப்பை டி-20 மகளிர் கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா தோல்வி

Last Updated: வெள்ளி, 23 நவம்பர் 2018 (08:29 IST)
உலகக்கோப்பை டி-20 மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி, 19.3 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மந்தனா 34 ரன்களும், ரோட்ரிகஸ் 26 ரன்களும் எடுத்தனர்.


113 ரன்கள் எடுத்தால் இறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 17.1 ஓவர்களில் 116 ரன்கள் அடித்து வெற்றி த்ரில் வெற்றி பெற்றது. ஜோன்ஸ் 53 ரன்களும், சிவியர் 52 ரன்களும் எடுத்தனர். ஜோன்ஸ் ஆட்டநாயகியாக தேர்வு பெற்றார்.


இதில் மேலும் படிக்கவும் :