கடைசி ஓவரில் சொதப்பிய இந்தியா: ஆஸ்திரேலியா வெற்றி

Last Modified புதன், 21 நவம்பர் 2018 (17:40 IST)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி இன்று முதல் டி-20 போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச தீர்மானித்ததால் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 17 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியின் 16வது ஓவரின்போது மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 17 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


இந்த போட்டியின் 17வது ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 11 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. களத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் பாண்ட்யா இருந்தனர். ஆனால் முதல் பந்தில் இரண்டு ரன்களும் இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் 3வது மற்றும் 4வது பந்தில் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் விக்கெட்டுக்கள் வீழ்ந்தன. ஐந்தாவது பந்தில் ஒரு ரன்னும், ஒரு வைடும், ஆறாவது பந்தில் 4 ரன்களும் இந்திய அணிக்கு கிடைத்தது. கடைசி ஓவரை ஸ்டோனிஸ் மிக அருமையாக வீசி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவினார்.


இதில் மேலும் படிக்கவும் :