மகளிர் உலகக் கோப்பை: இந்திய மகளிர் அணி அபார வெற்றி!!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.
பெண்கள் கிரிக்கெட் அணிக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இப்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்றது. அதையடுத்து இன்று வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது இந்தியா.
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 317 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்ம்ருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகிய இருவரும் அபாரமாக சதம் அடித்து அசத்தினர்.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கியது. முதலில் நிதானமாய் ஆட துவங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியை இந்திய அணி பவுலர்கள் ஒரு கை பார்த்தனர். இதன் விளைவாக மேற்கு இந்திய தீவுகள் அணி 162 ரன்களில் வீழ்ந்தது.
இதன் மூலம் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.