1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (09:01 IST)

இந்தியா - இலங்கை: இன்று 'பிங்க் பால் டெஸ்ட்'!!

இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது  2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் துவங்குகிறது. 

 
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மார்ச் 12 ஆம் தேதி ( இன்று) பெங்களூரில் நடைபெற உள்ளது. 
 
இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது  2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் துவங்குகிறது. பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக நடைபெற உள்ளது. பகல் - இரவு போட்டி என்பதால் பிங்க் நிற பந்தில் போட்டி நடைபெறும். 
 
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது என்பது கூடுதல் தகவல்.