திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (15:58 IST)

இந்திய நம்பர் 1 அணியாக வர வாய்ப்பு- வாசிம் ஜாபர் கணிப்பு

இந்திய கிரிக்கெட் அணி 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் நம்பவர் 1 அணியாக வர வாய்ப்புள்ளதாக வாசிம் ஜாபர் கணித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முன்னணியில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையிலான அணி சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான தொடர்,  தற்போது  நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் வென்றுள்ளது.

இந்த நிலையில்  இந்தியாவில் இந்த ஆண்டு டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.

தற்போது இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 3 வது இடமும், டெஸ்ட் அணிகளின் தரவரிசையில்2 வது இடமும், டி-20 தரவரிசையில் 1 முதலிடத்திலும் உள்ளது.

இந்த நிலையில்,இந்திய கிரிக்கெட்  அணி அனைத்து விதமான கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.