75 வருடங்களுக்கு பிறகு நிறுத்தப்படும் டென்னிஸ் போட்டி: ரசிகர்கள் ஏமாற்றம்!

Wimbledon
Prasanth Karthick| Last Modified வியாழன், 2 ஏப்ரல் 2020 (09:09 IST)
உலக புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கொரோனா பாதிப்புகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்றது இங்கிலாந்தில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி. 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமைவாய்ந்த இந்த போட்டி இந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை லண்டனில் நடைபெற இருந்தது.

தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா இங்கிலாந்திலும் பயங்கரமான உயிர்பலிகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பார்வையாளர்கள் இன்றி மூடப்பட்ட மைதானத்தில் போட்டி நடத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு நாட்டு வீரர்களும் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதால் போட்டிகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னால் முதல் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போர் ஆகிய காரணங்களால் ரத்து செய்யப்பட்ட இந்த தொடர் 75 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனாவால் ரத்து செய்யப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :