செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (12:53 IST)

இன்னும் 4 மாசம் இருக்குல்ல..! ஒலிம்பிக்கிற்கு தயாராகும் ஜப்பான்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவியிருக்கும் அசாதாரண சூழ்நிலையிலும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கின்றன. தற்போது கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பல சர்வதேச விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜூலை 24ம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல்களையும் தாண்டி ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கமாக அதன் தாயகமான கிரீஸில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. கிரீஸ் முழுக்க கொண்டு செல்லப்பட்ட இந்த தீபம் டோக்கியோவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

இதை கிரீஸிலிருந்து பெறுவதற்காக ‘டோக்கியோ 2020’ என்ற பெயருடன் ஜப்பான் விமானம் கிரீஸுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த போட்டிகளை நிறுத்துவதால் ஜப்பானுக்கு ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜூன் மாதம் ஒலிம்பிக் தொடங்குவதற்குள் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் என ஒலிம்பிக் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. மேலும் 56 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதால் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.