பிரபல கால்பந்து வீரர் திடீர் மரணம் – ஆரோன் ஃபின்ச் இரங்கல்!

Peter Whittingham
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 20 மார்ச் 2020 (12:09 IST)
இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரர் தலையில் அடிப்பட்டு இறந்த சம்பவம் இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தின் வேல்ஸ் பிராந்தியத்தின் ப்ளூபேர்ட்ஸ் கால்பந்து அணியின் மிகச்சிறந்த வீரர் பீட்டர் விட்டிங்ஹாம். இங்கிலாந்து கால்பந்து போட்டிகளில் 450க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் கலந்து கொண்டு 98 கோல்களை அடித்துள்ளார் பீட்டர்.

2007ல் ப்ளூபேர்ட்ஸ் அணியில் இணைந்த இவர் 2008 எஃப்.ஏ கோப்பை மற்றும் 2012 கார்லிங் கோப்பை போன்றவற்றில் பல கோல்களை அடித்து சாதனை படைத்தார்.

கடந்த 7ம் தேதி அன்று க்ளப் ஒன்றிற்கு சென்று திரும்பிய போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் தலையில் பலமாக அடிப்பட்ட பீட்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த நாட்கள் முழுவதும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பீட்டர் இறந்துள்ளார்.

அவரது இறப்பு இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கால்பந்து வீரர் ஆரோன் ஃபின்ச் இன்ஸ்டாகிராம் மூலம் பீட்டரின் இறப்புக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். தான் கண்ட வீரர்களில் மிகவும் சிறந்தவர் பீட்டர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :