அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது.
இதர கட்சிகளான சீமானின் நாம் தமிழர், தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருந்தாலும் அரசியல் விமர்சகர்கள் திமுக அதிமுக கட்சிகளில் எதாவது ஒன்றுதான் ஆட்சிக்கு வரும் எனக் கணித்தனர்.
அதன்படி தேர்தலுக்கு முந்தைய கருத்துகளைப் போல் நேற்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது. ரிபப்ளிக் முதலான சேனல்கலில் கருத்துகணிப்பில் திமுக 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஜெயிக்கும் எனக் கூறப்பட்டது. அதன்படி, தற்போது திமுக தமிழகம்முழுவதும் 140க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்ட ஸ்டாலின் மகன் உதயநிதி அதிக வாக்குகள் வித்தியாத்தில் முன்னிலையில் உள்ளார். உதயநிதி ஜெயித்துவிடுவார் என விமர்சகர்கள் கூறுகின்றனர். அப்படி உதயநிதி ஜெயித்தால் தான் போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலியே வென்றவர் என்ற சாதனையைப் படைக்கலாம்.
காலையில் முதல் சுற்றிலேயே 3281 வாக்குகள் உதயநிதி முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி உதயநிதி 44,265 வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி உறுதியாகியுள்ளது.