ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா? போட்டி ஒத்திவைப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

Varun Chakravarthi
Prasanth Karthick| Last Modified திங்கள், 3 மே 2021 (12:29 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியானதால் போட்டி ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.

இந்நிலையில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் தமிழக வீரர்களான வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் பிசிசிஐ இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :