1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (16:03 IST)

பாஜகவில் கங்குலி… மீண்டும் பரவும் வதந்திக்கு பாஜக தலைவர் பதில்!

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி பாஜகவில் சேர உள்ளதாக மீண்டும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான கங்குலி ஓய்வுக்குப் பின் கிரிக்கெட் சங்க பொறுப்புகளில் இருந்து இப்போது பிசிசிஐ தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பாஜகவில் சேரப்போவதாக இப்போது செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே மக்களவைத் தேர்தலின் போதே பாஜக கங்குலியைக் கட்சியில் சேர வற்புறுத்தியதாக சொல்லப்பட்டது.

வரும் 7-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அப்போது கங்குலி பாஜகவில் சேர உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இதை மேற்கு வங்க லைவர் திலிப் கோஷ் மறுத்துள்ளார். ’கங்குலி பேரணியில் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக பாஜகவில் சேருவதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை’ எனக் கூறியுள்ளார்.