செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (15:02 IST)

ஆபாச வீடியோ விவகாரம்: பாஜக அமைச்சர் ரமேஷ் ராஜினாமா !

ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். 

 
கர்நாடகாவில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் நீர்பாசன துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, இளம் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவருடன் பல முறை பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக தெரிகிறது.  
 
இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய சிடியை கர்நாடக மக்கள் உரிமை போராட்ட சங்க தலைவர் தினேஷ் கல்லஹள்ளி, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்துள்ளார். இந்த செய்தி நேற்று டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாகி கடும் சர்ச்சைகளை அங்கு எழுப்பியுள்ளது.  
 
மெத்தை மீது அமைச்சரும் அந்த இளம் பெண்ணும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் இருவரின் செல்போன் உரையாடல்கள் ஆகியவை ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். 
 
மேலும், என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் இதற்கான விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் எனவும் ரமேஷ் ஜார்கிஹோளி வேண்டுகோள் விடுத்துள்ளார்.