செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 1 டிசம்பர் 2021 (10:31 IST)

தோனியை விட ஜடேஜாவுக்கு அதிக தொகை ஏன்?

சி எஸ் கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களில் முதல் வீரராக ஜடேஜாவைத் தேர்வு செய்துள்ளது அணி நிர்வாகம்.

ஐபில் மெஹா ஏலத்துக்கு முன்பாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை அணி ஜடேஜாவை -16 கோடிக்கும் , தோனியை -12  கோடிக்கும், மெயின் அலியை -7  கோடிக்கும் , ருத்துராஜை-6  கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது.  

தோனியை விட ஜடேஜாவை அதிக தொகைக்கு எடுத்தது ஏன் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் லாஜிக்கலாக யோசித்தாலே இதற்கான விடை கிடைத்துவிடும். தோனி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் விளையாடுவாரா என்பது நிச்சயமில்லாதது. அதனால் ஜடேஜாவை அணிக்குக் கேப்டனாக்கும் விதத்தில் அவரை முன்னிலை படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.