புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 13 ஜூன் 2019 (17:00 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குச் செல்லும் அணிகள் எது ? கூகுள் கணிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் எந்தெந்த அணிகள் மோதும் என்று கூகுள் சீஇஓ சுந்தர் பிச்சை கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பல்வேறு அணிகள் பலத்தை போட்டியில் நிரூபித்து வருகின்றனர். இன்று நியூஸிலாந்து - இந்தியாவும் பலப்பரீட்சையில் இறங்குகின்றனர்.
 
இந்நிலையில்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்தெந்த அணிகள் இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்பதை கூகுளின் சீஇஓ சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வாசிங்டன்னில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுந்தர் பிச்சையிடம் செய்தியாளர்கள் உலகக்கோப்பை கிரிகெட்டில் குறித்து கேட்டனர்.
 
இக்கேள்விக்கு சுந்தர் கூறியதவது : உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதிபோட்டியில் இங்கிலாந்தும், இந்தியாவும் மோதும் என்று தெரிவித்தார்.