வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (07:07 IST)

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்தியா! இன்று நியூசிலாந்துடன் மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளை வென்றுள்ள இந்திய அணி இன்று நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. நாட்டிங்காம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இந்த போட்டிக்கு ஏற்கனவே அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையாகி முடிந்துவிட்டது
 
 
பலம் வாய்ந்த அணிகளான தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, பலம் வாய்ந்த நியூசிலாந்தையும் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான தவான் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியிருந்தாலும் ரோஹித் சர்மா நல்ல தொடக்கத்தை தருவார் என்றும், அவருக்கு கைகொடுக்கும் வகையில் புதியதாக களமிறங்கும் ரிஷப் பண்ட் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 
மேலும் விராத் கோஹ்லி, கே.எல்.ராகுல், தோனி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர்கள் சிறப்பான ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு பிளஸ் ஆக கருதப்படுகிறது. அதேபோல் பும்ரா, புவனேஷ்குமார் ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும் குல்தீப் யாதவ், கேதார் ஜாதவ் ஆகியோர் சுழல்பந்து வீச்சிலும் கலக்கி வருவதால் இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
 
இன்றைய போட்டியில் இந்திய அணி நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது நியூசிலாந்து அணி 2.163 ரன் ரேட் மற்றும் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது