கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேனா? காதல் கிசு கிசுவுக்கு பதிலளித்த அனுபமா!

Last Updated: வியாழன், 13 ஜூன் 2019 (11:23 IST)
கடந்த சில நாட்களாக தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான அனுபமா பரமேஸ்வரன் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவை  காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வைரலாக பேசப்பட்டது. 
 
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 
 
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால்  திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமுக வலைதளங்களில் ஆக்ட்டீவாக செயல்பட்டு தொடர்சியான பதிவுகள் , டப்மாஸ் என ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வந்தார். 
 
இதற்கிடையில் தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மலையாள மீடியா உலகில் அனுபமா இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக செய்திகள் பரவியது. இந்திய கிரிக்கெட் வீரரான பும்ரா தற்போது உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறார். பும்ரா தன் டிவிட்டர் பக்கத்தில் 25 பேரை மட்டுமே ஃபாலோ செய்கிறார். அதில் பெரும்பாலனவர்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சம்பந்தமான பிரபலங்கள் அப்படியிருக்க பும்ரா ஃபாலோ செய்யும் ஒரே ஹிரோயின் அனுபமா பரமேஸ்வரன் மட்டுமே. 
 
அனுபமா எப்போதும் அவரின் ட்விட்டர் கணக்கை ஆராய்வதே வேலையாக வைத்திருந்திருக்கிறார். துரும்பு கிடைத்தும் சும்மா விடுவார்களா ரசிகர்கள்,  ஏன் சம்பந்தமே இல்லாமல் அந்த கிரிக்கெட் வீரரின் ட்வீட்டுகளை ரீட்வீட் செய்கிறீர் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப கப்சிப்னு அமைதியாகிட்டார். 
 
இது உணமையா? வெறும் கிசுகிசு மட்டும் தானா என குழப்பத்தில் இருந்துவந்த ரசிகர்களுக்கு தற்போது விளக்கத்தை கொடுத்துள்ளார் அனுபமா, பும்ரா ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்கு தெரியும். இதுவரை நான் அவரை சந்தித்ததே இல்லை. நான் அவரை காதலிப்பதாக பரவும் செய்தி பொய்யானது. இப்படி எந்த ஒரு அடித்தளமும் இல்லாமல் ஒரு பெண்ணை பற்றி சமூக வலைதளத்தில் வதந்தி பரவியது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :