திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (22:19 IST)

ஜிம்பாவேவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள் இன்னிங்ஸ் வெற்றி

wi vs zim1
ஜிம்பாவேவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள் இன்னிங்ஸ் வெற்றி
ஜிம்பாவே மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 
 
இந்த போட்டியில் முதலில் ஜிம்பாவை அணி முதல் இன்னிங்ஸில் 115 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 173 ரன்களும், எடுத்தன. 
 
இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 292 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனாக குடகேஷ் மோட்டி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva