திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (21:14 IST)

இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக...பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள இடை நிலை ஆசிரியர்கள் சமவேலைக்குச் சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்தாண்டு டிசம்பர் 27 ஆம் தேதி அரசு ஆரம்பப் பள்ளிகளில் உள்ள  இடை ஆசிரியர்கள்  உண்ணாவிரத  போராட்டம் நடத்தினர்.

எனவே, தமிழ் நாடு அரசு சார்பில், போராட்டத்தில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இப்பிரச்சனைக்குத் தீர்வுகாணும் ஒரு குழு அமைக்கப்படும் என்று தமிழ் நாடு அரசு அறிவித்தது.

இந்த நிலையில், இன்று அரசுப் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர்  இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில்,  நிதித்துறை செயலர்( தலைவர்) பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  இப்பிரச்சனை பற்றி இக்குழுவினர் ஆய்வு செய்து அரசிடம் தெரிவிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.