துருக்கி நில நடுக்கம்''100 ஆண்டுகளில் மிக மோசமான இயற்கைப் பேரழிவு-'' WHO பிராந்திய தலைவர் தகவல்
மேற்கு ஆசியா – ஐரோப்பியாவுக்கு இடையில் அமைந்துள்ள நாடு துருக்கி. சமீபத்தில் துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கில் 35,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நில நடுக்கத்தில், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து, தங்கள் சொந்த வீட்டுகளையும், சொந்தங்களையும் இழந்து வாடி நிற்கின்றனர்.
இந்த நிலையில், துருக்கி நிலநடுக்கம் பற்றி உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
, நூறாண்டுகளில் ஐரோப்பியாவில் ஏற்பட்டுள்ள மிக மோசமான இயற்கைப் பேரழிவைச் சந்தித்துள்ளோம். துருக்கி நாட்டிற்கு இதுவரை 22 அவசர மருத்துவ குழுக்கள் சென்றுள்ளனஎன்று தெரிவித்துள்ளார்.