வெள்ளி, 1 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (21:53 IST)

பிபிசி அலுவலகத்தில் சோதனை: பிரெஸ் கிளப் ஆஃப் இந்தியா கண்டனம்

income tax raid
பிபிசி டெல்லி மற்றும் மும்பை அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதற்கு பிரஸ் கிளப் ஆப் இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. 
 
பிபிசி ஆவணப்படம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு பதிலடியாக மத்திய அரசு வருமானவரித்துறையை பிபிசி அலுவலகத்தில் ஏவி விட்டு இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் காட்டியுள்ளன. 
 
இந்த நிலையில் டெல்லி மற்றும் மும்பை பிவிசி அலுவலகங்களில் வருமான வரித்துறைவினர் சோதனை நடத்தியதற்கு பிரஸ் கிளப் ஆப் இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் நாளையும் பிபிசி அலுவலகத்தில் சோதனை தொடரும் என்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தான் சோதனை நடைபெற்று வருகிறது என்றும் வருமானவரித்துறை அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக சட்டத்தை விட வேறு எதுவும் பெரியது இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva