1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (12:34 IST)

ஜிம்பாவே - மே.இ.தீவுகள் டெஸ்ட்: தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம்.. விக்கெட்டே இழப்பின்றி 221 ரன்கள்

wi vs zim
ஜிம்பாவே - மே.இ.தீவுகள் டெஸ்ட்: தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம்.. விக்கெட்டே இழப்பின்றி 221 ரன்கள்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் மேற்கிந்த தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே சதம் அடித்து அசத்தியுள்ளனர். 
 
மேற்கிந்த தீவுகள் மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
 
இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரரான சந்திர்பால் மற்றும் பிராத்வெயிட் ஆகிய இருவருமே சதம் அடைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை மே.இ.தீவுகள் அணி 89 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 221 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜிம்பாவே அணியின் ஐந்து பந்துவீச்சாளர்கள் மாறி மாறி பந்து வீசியும் இன்னும் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran