போட்டிக்குப் பிறகு 6 தையல் … காலில் ரத்தக்கையோடு விளையாண்ட வாட்ஸன் – ரசிகர்கள் நெகிழ்ச்சி !

Last Modified செவ்வாய், 14 மே 2019 (09:10 IST)
ஐபிஎல் பைனலில் காலில் வழியும் ரத்தத்தோடு விளையாடிய வாட்ஸனுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

சென்னை மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் பைனல் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு நெஞ்சு வலியை வரவழைக்க வைக்கும் விதமாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் சென்னை அணிக்காக கடைசி வரை போராடினார் ஷேன் வாட்சன். கடைசி ஓவரில் வாட்சன் ரன் அவுட் ஆனதே சென்னை அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் நேற்று வாட்சன் காலில் ரத்தத்தோடு விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டு சென்னை வீரர் ஹர்பஜன் சிங் அவரது அர்ப்பணிப்பை உச்சி முகர்ந்தார்.  ரன் எடுக்க ஓடும்போது வாட்சனின் காலில் அடிபட்டதாகவும் அதையும் பொருட்படுத்தாமல் வாட்சன் தொடர்ந்து விளையாடியுள்ளார். இதையடுடுத்து வாட்சன் காலில் ரத்தம் வழியும் காலோடு விளையாடும் புகைப்படங்கள் வைரலாகியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் வாட்சனைப் பாராட்ட ஆரம்பித்தனர்.

இந்தப் போட்டிக்குப் பிறகு வாட்சன் காலில் சிகிச்சையளிக்கும் போது 6 தையல்கள் போடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் வாட்சன் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :