சதத்தை தவறவிட்ட டூ பிளஸ்சி– பஞ்சாப்புக்கு 171 ரன்கள் இலக்கு !

Last Modified ஞாயிறு, 5 மே 2019 (17:49 IST)
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் இன்னிங்ஸில் சென்னை அணி 170 ரன்கள் சேர்த்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளின் லீக் சுற்றுகள் இன்றோடு முடிகின்றன. இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. அதில் டாஸில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்திலேயே வாட்சனை விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரெய்னாவும் டூ பிளஸ்சியும் இரண்டாவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தது. அரைசதம் அடித்த ரெய்னா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த தோனி, ராயுடு, கேதார் ஜாதவ் யாரும் சிறப்பாக விளையாட முடியாமல் தினறினர்.

இதற்கிடையில் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த டூ ப்ளஸ்சி 96 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை சேர்த்தது. வழக்கமாக கடைசி நேரத்தில் அதிரடிக் காட்டும் தோனி இந்தமுறை 12 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே சேர்த்து ஏமாற்றமளித்தார்.இதில் மேலும் படிக்கவும் :