செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 மே 2019 (12:39 IST)

விஸ்வாசம் வசனம் மூலம் வெற்றிக்களிப்பு – பஜ்ஜி டிவிட் அலப்பறைகள் !

சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் நேற்றைய வெற்றிக் களிப்பை விஸ்வாசம் படத்தில் அஜித் பேசும் டைலாக் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை அணியில் சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வரும் இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் சிஎஸ்கேயின் ஒவ்வொரு வெற்றியின் போது தமிழில் டிவிட் போட்டு சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்து வருகிறார். இதனால் சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் பஜ்ஜி என்ன டிவிட் போடப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் நேற்று டெல்லி அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதை அடுத்து ஹர்பஜன் சிங் தனது ட்ரேட்மார்க் டிவிட்டைப் பதிவு செய்துள்ளார். இந்த முறை விஸ்வாசம் படத்தின் இடைவேளையின் போது அஜித் வில்லனிடம் பேசும் வசனத்தைப் போல ‘இஞ்யார்ரா, பேரு @chennaiipl, ஊறு சென்னை, சம்பவ இடம் சேப்பாக்கம், கேப்டன் பேரு #தல, ஒத்தைக்கு ஒத்தையா வந்து @IPL ல நின்னுப்பாருங்கவே! வேற லெவல் ஆட்டம்போட தயாரா இருக்காங்க நம்ம சூப்பர் fans! நாங்களும் தயார்! Thanks for the super support,’ எனத் தெரிவித்துள்ளார்.