புதன், 5 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2025 (08:41 IST)

டி 20 தொடர் முடிந்ததும் ரஞ்சிப் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்கள்!

சமீபகாலமாக இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களை இழந்து வருகிறது. கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரையும் இழந்தது. இதற்குக் கோலி போன்ற சீனியர் வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதே காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக சீனியர் வீரர்கள் உள்பட அனைவரும் சர்வதேசப் போட்டிகள் இல்லாத போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இதையேற்று அனைத்து வீரர்களும் ரஞ்சி போட்டியில் விளையாடினர். ஆனால் யாருமே பெரிதாக ரன்சேர்க்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி  கூட 6 ரன்களில் ஸ்டம்ப்புகள் பறக்க விக்கெட்டை இழந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடர் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் மும்பை அணிக்காக விளையாட மும்பை சென்றுள்ளனர்.  அடுத்து இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில் அந்த அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் யாரும் ரஞ்சிப் போட்டியில் விளையாட மாட்டார்கள்.