வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (11:21 IST)

ஐபிஎல் ஸ்பான்ஸ்ரில் இருந்து தானாகவே விலகியதா விவோ? அதிர்ச்சி தகவல்!

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸரில் இருந்து விவோ நிறுவனம் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜூன் 15ம் தேதி லடாக் பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் எல்லையோரத்தில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய அரசு கூறியது. ஆனால், சீனத் தரப்பில் இருந்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டுகின்றன. தங்கள் பகுதியில் எதிராளி ஊடுருவியதாக இரு தரப்பும் புகார் கூறுகின்றன.

இதையடுத்து இந்தியாவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கல் எழுந்துள்ளன. ஆனால் இது நடைமுறையில் எந்தளவு சாத்தியம் எனத் தெரியவில்லை. சீனாவின் விவோ நிறுவனம் இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஸ்பான்சராக இருக்கிறது. அந்த நிறுவனத்தைப் புறக்கணிக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் குரல்கள் எழுந்தன.

ஆனால் அது சாத்தியமில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு செய்தால் சுமார் 500 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் எனத் தெரிகிறது. விவோ நிறுவனம் 2017 ம் ஆண்டு முதல் 2022 வரை ஐந்து வருடத்திற்கு ஐ.பி.எல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சராக இருக்க 2199 கோடி ரூபாய்க்கு பிசிசிஐ-யிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது இந்திய சீனா உறவு சுமூகமாக இல்லாத நிலையில் ஸ்பான்சராக இருப்பது சரியாக இருக்காது என்பதால் விவோ நிறுவனம் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இது சம்மந்தமாக பிசிசிஐ தரப்போ அல்லது விவோ தரப்போ இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.