என் மனைவிக்கு இதுதான் நான் கொடுத்த பரிசு! – கோலி நெகிழ்ச்சி!

Virat Kohli
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 13 டிசம்பர் 2019 (12:41 IST)
இந்தியா – வங்கதேசம் இடையே நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20ல் முதல் இரண்டு ஆட்டங்களில் இரண்டு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் கடைசி ஆட்டம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது.

இறுதி ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் ஷர்மா விக்கெட்டுக்கு பிறகு இறங்கிய ரிஷப் பண்ட் உடனே விக்கெட்டை இழக்கவே, உடனடியாக கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். 29 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் அடித்து விளாசி 70 ரன்களை தாண்டி வெஸ்ட் இண்டீஸுக்கு இமாலய இலக்கை ஏற்படுத்தினார் விராட் கோலி.

இந்தியாவின் 241 ரன்கள் இலக்கை எட்ட முடியாத வெஸ்ட் இண்டீஸ் 173 ரன்களில் தோல்வியை தழுவியது. இதுகுறித்து பேசிய கேப்டன் விராட் கோலி ”நான் ராகுலிடம் நீ நின்று விளையாடு, நான் அதிரடி ஷாட்டுகளை அடித்து வீழ்த்துகிறேன்” என்று கூறிவிட்டே களம் இறங்கினேன். எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது” என்று கூறினார்.

மேலும் அவர் ”இன்னொரு வகையில் இந்த ஆட்டம் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டாம் ஆண்டு திருமண நாளின் போது நான் இந்த வெற்றியை பெற்றிருப்பதால் இது நான் என் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு வழங்கும் சிறப்பு பரிசாகும்” என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :