திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (18:11 IST)

டாப்புக்கு வந்த கோலி: ரேங்கிங்கில் சரிந்த ரோகித்!

ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் 15வது இடத்தில் இருந்து 10 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 
 
நடந்து முடிந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் விராட் கோலி. முதல் போட்டியிலும், 3வது போட்டியிலும் அரைசதம் அடித்தார். மூன்று போட்டிகளிலும் 183 ரன்கள் குவித்தார். 
 
இந்நிலையில் தற்போது ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் 15 வது இடத்தில் இருந்து 10 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். லோகேஷ் ராகுல் மூன்று இடங்கள் முன்னேறி 6 வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா ஒரு இடம் சறுக்கி 9வது இடத்தில் உள்ளார்.