2வது டி20: இந்தியாவுக்கு எளிய இலக்கை கொடுத்த தென்னாப்பிரிக்கா!
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஒரு பந்துகூட வசப்படாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று மொஹாலியில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்ததை அடுத்து தென்னாப்பிரிக்க அணி செய்து முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான டீகாக் அதிரடியாக விளையாடி 52 ரன்கள் குவித்தார். அதேபோல் பவுமா 49 ரன்களில் அவுட்டானார். இந்த இருவரின் விக்கெட்டுகள் விழுந்த பின்னர் மளமளவென தென்னாப்பிரிக்க அணி வீரர்களின் விக்கெட்டுகள் சரிய தொடங்கியதை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது
இந்தியாவின் தரப்பில் சஹார் 2 விக்கெட்டுகளையும் சயினி, ஜடேஜ, ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா, தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகிய ஏழு முன்னணி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த எளிய இலக்கை எளிதில் எட்டி விடும் என்றே கணிக்கப்படுகிறது