ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2019 (08:44 IST)

ஷமி-க்கு குசும்பு ஓவரோ ஓவர்... அவுட் ஆன வீரருக்கு சல்யூட்: வைரல் வீடியோ!

இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஷமியின் குசும்புத்தனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ரன்கள் குவித்தது. 
 
இதனையடுத்து 269 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மே.இ.தீவுகள் அணி, 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றி நடைபோடும் ஒரே அணியாக இந்தியா உள்ளது. 
இதை தவிர்த்து நேற்றைய போட்டியில் சில சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்தது. கேப்டன் கோலி 20,000 ரன்களை கடந்து சச்சின் மற்றும் லாராவின் சாதனை முறியடித்தார். இதோடு, தோனியின் சூப்பர் கேச் மற்று ஷமியின் சல்யூட்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. 
 
ஆம், போட்டியின் கடைசி விக்கெட்டை எடுத்த முகமது ஷமி, மேற்கிந்திய வீரர் செல்டன் காண்ட்ரெல் போல் சல்யூட் அடித்து கிண்டல் செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
இதோ அந்த வீடியோ...