ஜாலியாக ஊர்சுற்ற இங்கு வரவில்லை… விராட் கோலி அட்வைஸ்!
ஐபிஎல் தொடரில் கலந்துகொள்வதற்காக துபாய் வந்துள்ள வீரர்களுக்கு பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
வழக்கமாக மார்ச் மாதமே நடக்கும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் துபாயில் நடக்க உள்ளன. இதற்காக 8 அணியைச் சேர்ந்த வீரர்களும் துபாய்க்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி வீரர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக பேசியுள்ளார். அதில் ‘நாம் இங்கு ஜாலியாக இருக்கவோ அல்லது ஊர் சுற்றிப் பார்க்கவோ வரவில்லை. அதனால் யாரும் பாதுகாப்பு வளையத்தை மீறக்கூடாது. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில மாதங்களுக்கு ஐபிஎல் நடக்குமா என்றே நமக்குத் தெரியாது. அதனால் நாம் ஒழுங்காக நடத்திக் கொடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.