திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (11:48 IST)

வனிதாவுடன் சமாதானம் ஆகிவிட்டாரா ரவீந்தரன் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கடந்த சில வாரங்களாக சமூகவலைதளங்களை ரத்தக் களரி ஆக்கியிருந்த வனிதாவும் தயாரிப்பாளர் ரவீந்தரனும் இப்போது சமாதானம் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்த வனிதா அதன்பின் பெரும் சர்ச்சையில் சிக்கினார் என்பதும், இதுகுறித்து அவர் காவல்நிலையம் வரை செல்ல வேண்டிய நிலை வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது திருமணம் குறித்து விமர்சித்த அனைவரையும் வனிதா வெளுத்து வாங்கினார். அதில் முக்கியமாக வனிதாவுக்கு எதிராக பேசியவர் தயாரிப்பாளர் ரவீந்தரன்.

இருவருக்கும் இடையே நடந்த காரசாரமான உரையாடல்கள் சமூகவலைதளங்களில் இன்றும் கிடக்கின்றன. இந்நிலையில் இப்போது ரவீந்தரன் தான் புதிதாக ஆரம்பித்துள்ள யுடியூப் சேனலில் வனிதாவை நேர்காணல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் இருவருமே இதற்கு முன்பு எதுவுமே நடக்காதது போல பேசியுள்ளது மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.