1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 டிசம்பர் 2017 (19:12 IST)

திருமண புகைப்படங்களை விற்பனை செய்ய முடிவெடுத்த பிரபலங்கள்: காரணம் என்ன??

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெற்றது.
 
உறவினர்களுக்காக டெல்லியில் வரும் 21 ஆம் தேதியும், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமாத்துறை நண்பர்களுக்காக மும்பையில் வரும் 26 ஆம் தேதியும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
நேற்று முன்தினமே திருமணம் முடிவுற்றிருந்தாலும், திருமணம் தொடா்பான மொத்த புகைப்படமும் தற்போத வரை வெளிவரவில்லை. எனவே, தங்களது திருமண புகைப்படங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அறக்கட்டளைக்கு வழங்க கோலி மற்றும் அனுஷ்கா சர்மா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இவர்களது திருமண புகைப்படத்தை அமெரிக்காவை சோ்ந்த பேஷன் இதழுக்கு விற்பனை செய்ய உள்ளனர். இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர்.