செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (07:12 IST)

வெண்கல பதக்கமும் கிடையாது.. வினேஷ் போகத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

Vinesh
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை அதிகம் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் தனக்கு வெள்ளிப் பதக்கம் வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரது மனுவை பரிசீலனை செய்த விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ இறுதிப் போட்டிக்கு முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கூறி விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு ஒத்திவைக்கப்பட்டு அதன் பின் விசாரணை செய்யப்பட்டு  தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்வதாக  நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.

வினேஷ் போகத் சார்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே வாதாடினார். டாக்டர் அன்னபெல் பென்னட் என்ற நடுவர் இந்த மனு மீதான விசாரணை நடத்திய நிலையில் 3 முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பில் வினேஷ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் வினேஷ் போகத்துக்கு இந்த ஒலிம்பிக்கில் எந்த பதக்கமும் கிடைக்கவில்லை.

Edited by Siva