1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (10:12 IST)

உடைத்த கழிவுநீர் குழாயை சீர் செய்ய கோரி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பிய 6ம் வகுப்பு மாணவி!

திருச்சி கே.கே நகரை சேர்ந்த பஞ்சாமி மகள் கனிஷ்கா (11). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இவர் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார்.
 
அதில் கே.கே நகர் ஓழையூர் சாலையில் குருஞ்சி நகர் அருகே பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது.
 
இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களின் துர்நாற்றத்தினால் முகம் சுழித்து செல்கின்றனர். மேலும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் குடியிருப்பு வாசிகள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
 
எனவே எவ்வித காலதாமதம் இன்றி உடனடியாக இதனை சீர் செய்ய சம்பந்தப்பட்ட ஊழியருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பள்ளி மாணவி கனிஷ்கா அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.