திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (08:32 IST)

எங்கள் தொகுதி எம்.எல்.ஏவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் பொதுமக்கள் மனு..!

எங்கள் தொகுதி எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் கொடுங்கையூர் மக்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொடுங்கையூர் எம்எல்ஏ அசன் மௌலானா என்பவர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவுடன் அந்த பகுதி வாசிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து  கொடுங்கையூர் பகுதி மக்கள் சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் அளித்த புகாரில் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மௌலானா மாநகராட்சி சொந்தமான பொது வழி பாதையை ஆக்கிரமித்து சுவர் எழுப்பி உள்ளார். அதுமட்டுமின்றி அந்த பகுதி மக்கள் புகார் அளித்தால் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கொடுங்கையூர் பகுதியில் மக்கள் சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் புகார் அளித்துள்ளனர்
 
இந்த புகார் கடிதத்தில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று அரசின் ஆவணங்கள் உறுதி செய்துள்ள நிலையில் அவற்றை பொருட்படுத்தாமல் கணபதி தெருவை ஆக்கிரமித்ததோடு, அந்த பகுதியில் போராடும் மக்களை மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva