ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (16:17 IST)

மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம்.? முற்றுப்புள்ளி வைத்த மனுபாக்கரின் தந்தை..!!

Neeraj
நிரஜ் - மனு பாக்கர் இடையே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுவது வதந்திகள் என மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் விளக்கம் அளித்து உள்ளார். 
 
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும், பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கங்களை வென்ற வீராங்கனை மனு பாக்கரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவியது.
 
மனு பாக்கரின் தாய் சுமேதா பாக்கர், நீரஜ் சோப்ராவை சந்தித்த வீடியோ மற்றும் தனிமையில் நீரஜ் மற்றும் மனு பாக்கர் பேசிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், எக்ஸ் பயனர்கள் இரு தரப்பிலும் திருமண பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்று கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் விளக்கம் அளித்து உள்ளார். அதில் நிரஜ் - மனு பாக்கர் இடையே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுவது வதந்திகள் என அவர் தெரிவித்துள்ளார். மனு பாக்கர் இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர்,  இப்போது அவளது திருமணத்தைப் பற்றி சிந்திக்கவில்லை என்று கூறினார்.

 
மேலும், தனது மனைவியும் நீரஜ் சோப்ராவும் பேசும் வீடியோவுக்கு பதிலளித்த ராம் கிஷன், மனு பாக்கரின் தாய் நீரஜ் சோப்ராவை தனது மகனைப் போலவே நடத்துகிறார் என்று கூறினார்.