வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (16:53 IST)

வினேஷ் தகுதி நீக்கத்துக்குப் பின் சதி இருக்கிறது… விஜயேந்தர் சிங் குற்றச்சாட்டு!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த வினேஷ் போகத எடை கூடுதலாக இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  50 கிலோ மல்யுத்த பிரிவில் விளையாடி வந்த அவர் இன்று காலை திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உடல் எடை 50 கிலோவுக்குக் கூடுதலாக 100 கிராம் இருந்ததுதான் என சொல்லப்படுகிறது.

இது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில் பலரும் வினேஷுக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லி வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரான விஜயேந்தர் சிங் வினேஷின் தகுதி நீக்கத்துக்குப் பின் சதி உள்ளதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அவரது பேச்சில் “எங்களைப் போன்ற குத்துச்சண்டை வீரர்கள், ஒரே இரவில் 5 முதல் 6 கிலோ வரை எடைக் குறைக்கமுடியும். 100 கிராம் என்பதெல்லாம் பொருட்டே இல்லை. பசியையும் தாகத்தையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று எங்களுக்குத் தெரியும். இந்தியா விளையாட்டில் சிறந்த நாடாக உருவாவதை விரும்பாத சிலர் சதி செய்திருக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.