வியாழன், 3 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (16:25 IST)

வினேஷ் போகத்திடம் தோல்வியுற்றவர் இறுதிப் போட்டிக்கு தேர்வா?

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதை இந்தியாவே கொண்டாடியது. இந்நிலையில் இன்று காலை வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் தகுதி நீக்கத்துக்குக் காரணம் அவர் உடல் எடை 50 கிலோவுக்குக் கூடுதலாக 100 கிராம் இருந்ததுதான் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார் வினேஷ் போகத். இதனால் அவரிடம் அரையிறுதியில் தோற்ற கியூப நாட்டு வீராங்கனையான யூஸ்னெஸிலிஸ் கூஸ்மன் இறுதிப் போட்டியில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவருக்கு தங்கமும் தோல்வி அடைபவருக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படும்.

வெண்கலத்துக்கான போட்டியில் ஜப்பான் வீராங்கனை சுசாகி மற்றும் உக்ரைன் வீராங்கனை ஓக்சானா லிவச் ஆகியோர் மோதவுள்ளனர்.