1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (17:46 IST)

ருத்ராஜை அணியில் எடுத்து எந்த பயனும் இல்லை: முன்னாள் கேப்டன் கருத்து

ருத்ராஜை உடனடியாக இந்திய அணியில் இணைக்க வேண்டும் என்றும் இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்து அணியில் எடுப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் முன்னாள் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் பேட்ஸ்மேனான ருத்ராஜ் சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து அசத்தினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ருத்ராஜூக்கு தற்போது 24 வயது ஆகிறது என்றும் இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்து அவரை அணியில் தேர்வு செய்வதால் எந்தவித பயனும் இல்லை என்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ருத்ராஜை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்
 
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் ஆலோசனையின்படி இந்திய அணியில் ருத்ராஜ் இணைக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்