1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (09:13 IST)

பிரபஞ்ச அழகி போட்டியில் பட்டம் சூட்டிய இந்திய பெண்! – குவியும் வாழ்த்துகள்!

இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த பெண் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் பிரபஞ்ச அழகிக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகளும் இதில் கலந்து கொள்ளும் நிலையில் இறுதியில் ஒருவருக்கு மட்டும் பிரபஞ்ச அழகி என்ற பட்டம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டில் 70வது பிரபஞ்ச அழகிகள் போட்டி இஸ்ரேலில் உள்ள ஈலாட் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பஞ்சாப் பகுதியை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து என்பவரும் கலந்துக் கொண்டார். இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஈகுவடார் நாடுகளை சேர்ந்த அழகிகளோடு போட்டியிட்ட ஹர்னாஸ் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். இந்நிலையில் பல்வேறு தரப்பிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.