வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (06:57 IST)

மகளிர் ஐபிஎல்.. உபி அணி அபார வெற்றி.. மும்பை அணி போராடி வெற்றி..!

மகளிர் ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மும்பை மற்றும் உத்தரப்பிரதேச அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் உத்தரப்பிரதேச அணி மிக எளிதில் மும்பை அணியை வீழ்த்தியது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடி நிலையில் 16.3 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதனை அடுத்து புள்ளி பட்டியலில் உத்தர பிரதேச அணி 2 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய மூன்று அணிகளும் முதல் மூன்று இடத்தில் உள்ளது என்பதும் குஜராத் அணி இரண்டு போட்டிகள் விளையாடிய இரண்டிலும் வெற்றி பெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Siva