1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (19:36 IST)

ரஞ்சி கோப்பையை ஒதுக்கிவிட்டு இஷான் கிஷான் செய்யும் செயல்… அவரே வெளியிட்ட வீடியோ!

தென்னாப்பிரிக்கா தொடரில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷான் மனச்சோர்வு என்று சொல்லி அந்த தொடரில் இருந்து விடுப்பு கேட்டு வெளியேறினார். அதன் பின்னர் தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பை தொடரிலும் விளையாடவில்லை.

இஷான் கிஷான் மீண்டும் அணியில் இணைவது சம்மந்தமாக பேசிய பயிற்சியாளர் டிராவிட், “இஷான் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டுமென்றால், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போதுதான் அவர் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவார்” எனக் கூறியிருந்தார். இதன் மூலம் இப்போதைக்கு இஷான் கிஷான் மேல் தேர்வுக்குழுவினரின் பார்வை இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் அடுத்த மாதம் நடக்க உள்ள ஐபிஎல் தொடருக்கு இப்போதே பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்ட உடனே இஷான் கிஷான் ஹர்திக் பாண்ட்யாவுடன் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் அவர் உள்ளூர் போட்டிகளைக் கண்டுகொள்ளாமல் முழுக்க முழுக்க ஐபிஎல் தொடருக்குதான் தயாராகி வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.