வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (14:28 IST)

10 மற்றும் 11 ஆவது இடத்தில் இறங்கி சதம் அடித்த இளம் வீரர்கள்… ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி சாதனை!

இந்திய அளவில் முக்கியமான தொடர்களில் ஒன்றான ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது நடந்து நாக் அவுட் சுற்றுகளை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் காலிறுதிப் போட்டி ஒன்றில் பரோடா மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 384 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பரோடா அணி 348 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை மும்பை இந்தியன்ஸ் அணி பேட் செய்த போது 569 ரன்கள் சேர்த்தது. இதில் கடைசியாக 10 ஆவது மற்றும் 11 ஆவது ஆகிய இடங்களில் இறங்கி விளையாடிய தனுஷ் கோடியான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகிய இருவரும் சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.

ரஞ்சிக் கோப்பை வரலாற்றிலேயே இதற்கு முன்னர் இதுபோல நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.